Song lyrics

Thirupathi Vantha Lyrics

திருப்பதி வந்தா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Bharathwaj
Year
2006
Singers
Shankar Mahadevan
Lyricist
Perarasu
Thirupathi Vantha

Lyrics

Thirupathi Vantha Lyrics

திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
உனக்கு மேல உனக்கு மேல யாரு பாருடா
உன்ன என்ன வாழ வெச்ச சாமி தானடா
வாழ்கையில வாழ்கையில நூறு பாடம்டா
கத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா
சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு
ஹோய் சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு
மனுசனுக்கு கிறுக்கு மனசுக்குள்ள இருக்கு
திருப்பதி வந்தா
ஹே திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்

நாளுக்கு நாளு உழைச்சி தான் பாரு அதுதான் திருநாளு
தூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்கையில் சேராது
ஹேய் நாளுக்கு நாளு உழைச்சி தான் பாரு அதுதான் திருநாளு
தூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்கையில் சேராது
வேலை வெட்டி இல்லையினா வேட்டி கட்டி பலனில்லைடா
வாய கட்டி வயித்த கட்டி சேத்த பணம் உனக்கில்லடா
எடுக்கிற வாழ்க்க பெரும்பாவம்டா
கொடுக்கிற வாழ்க்க வரம் தானடா
தான் தான்னு நெனச்சா அகம்பாவம்டா
நான் தானு நெனச்சா எதிர் காலம்டா
வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா ஏழை நம்மை வாழ வைக்கும்
திருப்பதி வந்தா
ஹே திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்

வயலுக்கு நீறு ஊத்தி தான் பாரு பூக்களில் உன் பேரு
வாழைக்கு தாரு ஏழைக்கு சோறு இல்லேன்னா மதிப்பேது
ஹேய் வயலுக்கு நீறு ஊத்தி தான் பாரு பூக்களில் உன் பேரு
வாழைக்கு தாரு ஏழைக்கு சோறு இல்லேன்னா மதிப்பேது
போர்வைக்குள்ள வாழ்ந்தாலுமே எந்நாளும் கொளாருடா
போராடியே வாழ்ந்துபுட்டா அது சொல்லும் வரலாறுடா
சொந்த பந்த வரவ நெனைகாதடா
சொந்த காலு மட்டும் உறவாகும்டா
பேருக்கு வாழ்ந்தா நீ யாருடா
திருப்பதி சொன்னா தகராறுடா
வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா ஏழை நம்மை வாழ வைக்கும்

திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
உனக்கு மேல உனக்கு மேல யாரு பாருடா
உன்ன என்ன வாழ வெச்ச சாமி தானடா
வாழ்கையில வாழ்கையில நூறு பாடம்டா
கத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா
சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு
ஹோய் சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு
மனுசனுக்கு கிறுக்கு மனசுக்குள்ள இருக்கு
திருப்பதி வந்தா
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people