Song lyrics

Neeyum Naanum Ondru Lyrics

நீயும் நானும் ஒன்று பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela
Lyricist
A. Maruthakasi
Neeyum Naanum Ondru

Lyrics

Neeyum Naanum Ondru Lyrics

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று


அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று


எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
என்பதுனக்கும் தெரியவில்லை
எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
என்பதெனக்கும் புரியவில்லை

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று


உறவுமில்லை பகையுமில்லை
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை
இரவுமில்லை பகலும் இல்லை
எதுவும் உலகில் எனக்கில்லை

நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people