அக்கா மக சின்னப் பொண்ணு பாடல் வரிகள்

Last Updated: Dec 22, 2024

Movie Name
Chinna Chinna Aasaigal (1989) (சின்ன சின்ன ஆசைகள்)
Music
Chandrabose
Year
1989
Singers
Vani Jayaram
Lyrics
Muthulingam
ஆங்..அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே
அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே
அள்ளி அள்ளி முத்தமிட்டு பார்க்க வந்தாளே
தயங்காதே மயங்காதே என்னை தழுவிக் கொள்ள வா

அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே
அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே

உச்சி மரக் கொம்பிலுள்ள கொய்யா பிஞ்சுங்க
உங்களுக்கு பொண்டாட்டி நான் என்ன கொஞ்சுங்க
கன்னத்தோட கன்னம் வச்சு கதைய சொல்லுங்க
கையும் கையும் பின்னிக் கொள்ள வெக்கம் ஏனுங்க

தனிமையாக நானும் தூங்க முடியல்ல
இரவு நேரமான தாங்க முடியல்ல
தனிமையாக நானும் தூங்க முடியல்ல
இரவு நேரமான தாங்க முடியல்ல
இதய வாசல் கதவு இப்ப
உனக்கு இங்கே தெறரக்கிறேன்

அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே
அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே
அள்ளி அள்ளி முத்தமிட்டு பார்க்க வந்தாளே
தயங்காதே மயங்காதே என்னை தழுவிக் கொள்ள வா

அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே
அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே

முன்னும் பின்னும் தங்கத் தேரு குலுங்கி நிக்குது
முத்துப்பேட்டை மச்சானுக்கு கண்ணு சொக்குது
உள்ளுக்குள்ளே மெல்ல மெல்ல ஆசை துள்ளுது
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள உள்ளம் சொல்லுது

விடிய விடிய நாமும் ஆடிப் பாக்கலாம்
விடிந்த பின்னும் கூட தேடிப் பாக்கலாம்
விடிய விடிய நாமும் ஆடிப் பாக்கலாம்
விடிந்த பின்னும் கூட தேடிப் பாக்கலாம்
இளமை காலம் இருக்கும்போதே சுகத்த நீயும் அனுபவி

அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே
அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே
அள்ளி அள்ளி முத்தமிட்டு பார்க்க வந்தாளே
தயங்காதே மயங்காதே என்னை தழுவிக் கொள்ள வா

அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே
அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே..ஹோய்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.