Song lyrics

Kanni Vedi Un Kannil Lyrics

கன்னி வெடி உன் கண்ணில் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vijay Antony
Year
2009
Singers
Sangeetha Rajeshwaran, Vijay Antony
Lyricist
Eknaath
Kanni Vedi Un Kannil

Lyrics

Kanni Vedi Un Kannil Lyrics

ஆண் :கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி
கனவிலே உன் இளமை துள்ளுதடி
உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடி டி டி டி டி டி

பெண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

பெண் : முடிவு செய் முடிவு செய் முத்தங்கள்
கொடுக்க முடிந்தால் செய்
பதிவு செய் கை ரேகையை
என் மேனியில் பதிவு செய்

ஆண் : உதவி செய் உதவி செய்
வெட்கத்தை விரட்ட உதவி செய்
செலவு செய் செலவு செய்
உன் ஏக்கத்தை செலவு செய்

பெண் : போதும் என்பது மனசு
சுகம் வேண்டும் என்பது வயசு
ஓட சொல்லுது கொலுசு என்னை விடுவாயா

ஆண் : காதல் எனக்கும் புதுசு
சுக வேதனை படுது மனசு
பாவி உன் நினைவாலே என்
மனதில் மனதில் தினமும் அடி தடி

ஆண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி
பெண் : கனவிலே உன் இளமை துள்ளுதடா
உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா டா டா டா
கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி

ஆண் : ஓ எதுவரை எதுவரை
வானின் எல்லைகள் எது வரை
அதுவரை அதுவரை நீ என் மனதில் அதுவரை

பெண் : ஒரு முறை ஒரு முறை உன்னை
காண வேண்டும் என் தனி அறை
விடுமுறை விடுமுறை என் ஆடைக்கு விடுமுறை

ஆண் : காலை வெண்பனி மூட்டம் நீ
பாபிலோனா தூங்கும் தோட்டம்
ஜாதி மல்லிகை கூட்டம் உன் உடலாகும்

பெண் : எங்கும் உன் போல் தோற்றம் இது
ஹார்மோன்கள் செய்யும் மாற்றம்
அடிக்கடி உன் நினைவாலே என்
இரவில் இரவில் தினமும் இடி இடி

பெண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடா என் நெஞ்சை கொல்லுதடா
கனவிலே உன் இளமை துள்ளுதடா
உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா டா டா டா..

ஆண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people