Song lyrics

Sakthi Kodu Lyrics

சக்தி கொடு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
2002
Singers
Karthik
Lyricist
Vairamuthu
Sakthi Kodu

Lyrics

Sakthi Kodu Lyrics

நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு
இறைவா… இறைவா
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு
நம் நடை கண்டு அஹங்காரம் சூடாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு

வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வெய்க்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா… இறைவா
முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா… இறைவா
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு
நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people