Song lyrics

Seval Kodi Lyrics

சேவல் கொடி பறக்குதடா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2007
Singers
K. J. Yesudas
Lyricist
Pa. Vijay
Seval Kodi

Lyrics

Seval Kodi Lyrics

வேல் வேல் வேல் வேல்....

சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
தாக்க தாக்க தாக்குமடா நோக்க
நோக்க காக்குமடா
பார்க்க பார்க்க பரவுமடா முருகையா

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் இந்த
முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான் ஹே காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நா பாட்டுக்குள்ள உன்ன வச்சி பாடட்டா
நா பாட்டுக்குள்ள உன்ன வச்சி பாடட்டா

சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
தாக்க தாக்க தாக்குமடா நோக்க
நோக்க காக்குமடா
பார்க்க பார்க்க பரவுமடா முருகையா

கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
கந்தனுக்கு கந்தனுக்கு வேலனுக்கு வேலனுக்கு
முருகனுக்கு முருகனுக்கு குமரனுக்கு குமரனுக்கு

தெருக்கூத்து தமிழனுக்கு முதலாட்டம்
புலி வேசம் எங்களுக்கு புகழ் கூட்டும்
வீரம் தான் கந்தனுக்கு தாய்ப்பாலு
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு
வேடனடா வேடன் இவன் தனிகை மலை நாடன்
வீரனடா வீரன் நான் கந்தனுக்கு பேரன்
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்
நீ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நா பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா
நா பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா

சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
தாக்க தாக்க தாக்குமடா நோக்க
நோக்க காக்குமடா
பார்க்க பார்க்க பரவுமடா முருகையா

ஏலேலேலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஏலேலேலோ
தந்தானேநானே நானே நானே நானே
தந்தானேநானே நானே நானே நானேநா
தந்தானேநானே நானே நா தந்தானே நா

மனிதந்தான் முருகனோட அவதாரம்
வீரத்தத் தத்தெடுத்த சிவதாரம்
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்
தேர் சுத்தி ஓடும் போது பொறியாடும்
ஏறுமலை ஏறு எங்கண்ணன நீ பாரு
ஆறுமுகம் யாரு நம்ம நண்பந்தானே கூறு

தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு

விண்ணும் மண்ணும் தட தடக்க
காற்றும் புயலும் கட கடக்க
வாரான் வாரான் மலையேறி வேலய்யா
வேலும் மயிலும் பர பரக்க
காடும் மலையும் வெட வெடக்க
வாரான் வாரான் வரிசையிலே முருகையா

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் இந்த
முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான்
ஹே காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடி சூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா

நான் பாட்டுக்குள்ள உன்ன வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள உன்ன வச்சி பாடட்டா

நான் பாட்டுக்குள்ள உன்ன வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள உன்ன வச்சி பாடட்டா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people