நான் முதன் முதல் பாடிய பாட்டு பாடல் வரிகள்

Last Updated: Dec 24, 2024

Movie Name
Thaai Naadu (1989) (தாய் நாடு)
Music
Manoj Gyan Varma
Year
1989
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Aabavanan
நான் முதன் முதல் பாடிய பாட்டு – இங்கு
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்...(நான்)

போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா
கேள்விகள் விடை பெற வேண்டும் – அந்த
விடைகளில் புது யுகம் தோன்றும்

கேட்க மறந்த மனிதா உன்
ஊமை வாழ்வும் இனிதா
அழுதவன் சிரித்திட வேண்டும் – அந்த
சிரிப்பினில் தத்துவம் தோன்றும்

சிரிக்க மறந்த மனிதா நீ
சுமக்கும் பாரம் பெரிதா
தாங்காது இனி தாங்காது புது
போராட்டம் காண நீ ........(முதல்)

கனவுகள் உயிர் பெற வேண்டும் – அது
உயிர் பெற போரிட வேண்டும்
காலம் மீண்டும் வருமா – அது
கனவை மீட்டுத் தருமா

சிறைகளும் உடை படவேண்டும் – அதை
உடைத்திடத் துணிவுகள் வேண்டும்
துணையும் மீண்டும் வருமா – அது
துணிவை மீட்டுத் தருமா
போதாது இது போதாது நீ போராட ஓடி வா..(நான்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.