Song lyrics

Ennodu Kathal Endru Lyrics

என்னோடு காதல் என்று பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Deva
Year
2002
Singers
Harini, Mano
Lyricist
Vairamuthu
Ennodu Kathal Endru

Lyrics

Ennodu Kathal Endru Lyrics

என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
ஆஹ் என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா

என் சட்டை பட்டனோடு
கூந்தல் முடியை சிக்க வைத்து
ஹய்யோ விடுடா என்றால்

நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசி கண்டு
ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய்

சீ சீ சீ சீ
கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா ஹும்

சரி வளைக்க முயன்றது யாரு.....யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு....யாரு
நீயா நானா

நான் வந்து நீயோடு ஒன்றானது
ஹஹ நாம் என்ற சொல் ஒன்று உண்டானது
ஆண்டவா.....என்னோடு காதல் என்று
பேச வைத்தது நீயா இல்லை நானா.....

நம் ஹோட்டல் மாடி அறைக்கு
நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்டில் செல்வோம் என்றாய்

நோ நோ நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்டுகுள்ளே
நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இடித்து நின்றாய்

சீ சீ சீச்சி சீ சிச்சி சீ
லிஃப்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடி கிடந்ததாரு
நீயா இல்லை நானா

ஒட்டி வந்தது யாரு
யாரு யாரு......நீயா நானா
ஒத்துழைத்தது யாரு.....யாரு
நீயா நானா

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா...ஏய்..(ஊரெங்கும்)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people