Song lyrics

Kazhugumalai Pazhanimalai Lyrics

கழுகுமலை பழனிமலை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
G. Ramanathan
Year
1961
Singers
Seerkazhi Govindarajan
Kazhugumalai Pazhanimalai

Lyrics

Kazhugumalai Pazhanimalai Lyrics

கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா
கழுகுமலை பழனிமலை
கால்நடையாய்ப் போக வேணும்
எங்கந்தா, எம்முருகா-என்வேலா எங்குமரா
-ஆ-ஆ சுப்பிரமணியா-ஆறுமுகா-
நீ கண்திறந்து பார்த்திடய்யா

எட்டுஜாண் குச்சிக்குள்ளே...
கந்தையா எத்தனை நாளிருப்பேன்
எட்டுஜாண் குச்சிக்குள்ளே-
கந்தையா எத்தனை நாளிருப்பேன்-
ஒரு மச்சுவீடு கட்டித் தாருங்காணும்-
உச்சி மலையின் மேலோனே-
ஒரு (மச்சு வீடு) சட்டியில் சேர்ந்ததெல்லாம்-
கந்தா உன் சன்னதி சேர்த்திடுவேன் (சட்டியில்)

மொட்டை ஆண்டி ஒன்னை முழுசாவே நம்புறேன்
மோட்சம் தந்திடப்பா-அட (மொட்டை)
தீராத வினைகளெல்லாம்
தீர்த்து வைப்பார் கோவிந்தம்
மாறாத மனசையெல்லாம்
மாத்தி வைப்பார் கோவிந்தம்!
பட்டை நாமம் கண்டால் பசி தீர்ப்பார் கோவிந்தம்-
உன் கட்டை கடைந்தேறக் கைகொடுப்பார் கோவிந்தம்!
கோவிந்தம் கோவிந்தம்
கொடுத்தா புண்ணியம் கோவிந்தம்!
ரகுராமா ரகுராமா நடுத்தெருவிலே என்னை விடலாமா?

அடப்பாவிகளே பாவிகளே
பார்த்துட்டு சும்மா போறீங்களே!
கோவிந்தம் கோவிந்தம் கோவப்படாத கோவிந்தம்!
மானாகி,மயிலாகி,மானாகி,
மயிலாகி நானாகி,நீயாகி,
வடிவாகி வந்த வடிவே-ஏ-ஏ

பெண்ணாகி,ஆணாகி,பேச்சாகி மூச்சாகி
-அடேயப்பா
பெண்ணாகி ,ஆணாகி,பேச்சாகி,மூச்சாகி
கண்ணாலே கொல்லும் கண்ணே-
கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
கண்ணே உடம்பை நம்பாதே-
கண்ணே உடம்பை நம்பாதே (உடம்பை)

உயிர் பிரிந்த பின்னே-
இது ஒன்றுக்கும் உதவாத மண்ணே
உடம்பை நம்பாதே-கண்ணே
உடம்பை நம்பாதே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people