Song lyrics

Ragangal Padhinaru Lyrics

ராகங்கள் பதினாறு பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Karthik
Lyricist
Vaali
Ragangal Padhinaru

Lyrics

Ragangal Padhinaru Lyrics

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா ( இசை )


ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா



கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா



இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இடையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இடையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது ஆ...
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people