Song lyrics

Kannamma Kannamma Lyrics

கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Rajesh Khanna
Year
1988
Singers
Rajkumar Bharathi
Lyricist
Rajesh Kanna
Kannamma Kannamma

Lyrics

Kannamma Kannamma Lyrics

கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா
கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட
கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட

விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே
வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

பாதையில கெடந்த முள்ளு குத்தியும்தான் வலிக்கலையே
பச்சத் தண்ணி கூட இன்னும் தொண்டையத்தான் நனைக்கலையே
செவப்பேறி கண்ணு ரெண்டும் கெறங்கி இப்போ தவிக்குதம்மா
ஒன் நெனப்பா உள்ளம் இங்கே தவம் கெடந்து துடிக்குதம்மா

சிந்தும் கண்ணீர் பூமியிலே சிந்து கவி பாடுதடி
சிந்தையிலே ஒன் நெனப்பு சிறகடிச்சு பறக்குதடி
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

துடுப்பிழந்த படகப் போல தவிக்குதம்மா என் இதயம்
துருப் பிடிச்ச என் வாழ்வில் வந்திடுமோ ஓர் உதயம்
குடத்திலிட்ட விளக்காக ஆகிவிட்ட காதல் கதை
கிணற்று தவளப் போல இருக்குதடி என் நெலம

கொட்டுதடி நெஞ்சில் ரத்தம் கொஞ்சந்தாடி உந்தன் முத்தம்
நான் எட்டுத் திக்கும் போட்ட சத்தம் கேக்கலயா உனக்கு மட்டும்
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட
கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட

விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே
வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people