பார்த்த முதல் நாளே பாடல் வரிகள்

Last Updated: Dec 04, 2024

Movie Name
Vettaiyaadu Vilaiyaadu (2006) (வேட்டையாடு விளையாடு)
Music
Harris Jayaraj
Year
2006
Singers
Bombay Jayashree, Unni Menon
Lyrics
Thamarai
பார்த்த முதல்
நாளே உன்னைப் பார்த்த
முதல் நாளே காட்சிப் பிழை
போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை
போலே ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய் கடலாய் மாறி
பின் எனை இழுத்தாய் என் பதாகை
தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே

காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே உன் விழியில்
வழியும் பிரியங்களை பார்த்தேன்
கடந்தேன் பகல் இரவை உன் அலாதி
அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்

காலை எழுந்ததும்
என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண்
பார்க்கும் கடைசி காட்சிக்குள்
நிற்பதும் உன்முகமே

என்னைப் பற்றி
எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல்
உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும்
என்று தவிப்பேன்

போகின்றேன் என
நீ பல நூறு முறைகள் விடை
பெற்றும் போகாமல் இருப்பாய்
சரியென்று சரியென்று உனைப்
போகச் சொல்லி
[ கதவோரம் நானும்
நிற்க சிரிப்பாய் ] (2)

காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே

ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய் கடலாய் மாறி
பின் எனை இழுத்தாய்

உன் அலாதி
அன்பினில் நனைந்த
பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்

உன்னைமறந்து நீ
தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு
ரசித்தேன் தூக்கம் மறந்து
நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்

யாரும் மானிடரே
இல்லாத இடத்தில் சிறுவீடு
கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற
வாழ்வை மரம் தோறும் செதுக்கிட
வேண்டும்

கண் பார்த்து
கதைக்க முடியாமல்
நானும் தவிக்கின்ற
ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்க்கும்
[ சலிக்காத ஒரு பெண்ணும்
நீ தான் ] (2)

பார்த்த முதல்
நாளே உன்னைப் பார்த்த
முதல் நாளே காட்சிப் பிழை
போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை
போலே ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய் கடலாய் மாறி
பின் எனை இழுத்தாய் என் பதாகை
தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.