தித்திக்குதே பாடல் வரிகள்

Last Updated: Dec 24, 2024

Movie Name
Thithikudhe (2003) (தித்திக்குதே)
Music
Sridevi Vijaykumar, Vidyasagar
Year
2003
Singers
Sujatha Mohan
Lyrics
Vairamuthu

சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா

இதோ உன் காதலன்
என்று விறு விறு விறுவென
கல கல கலவென அடி மன
வெளிகளில் ஒரு நொடி நகருது
கேட்டாயா

உன் மெத்தை
மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

[ தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான
நான நா ] (2)

சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா

கண்ணா உன் காலணி
உள்ளே என் கால்கள் நான்
சேர்ப்பதும் கண்மூடி நான்
சாய்வதும் கனவோடு நான்
தொய்வதும் கண்ணா உன்
கால் உறை உள்ளே என் கைகள்
நான் தொய்ப்பதும் உள்ளுற தேன்
பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும்

முத்து பையன் தேநீர்
உண்டு மிச்சம் வைத்த
கோப்பைகளும் தங்க கைகள்
உண்ணும் போது தட்டில் பட்ட
ரேகைகளும் மூக்கின் மேலே
முகாமிடும் கோபங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

அன்பே உன் புன்னகை
கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அரை தனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்

அக்கம் பக்கம் நோட்டம்
விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

[ தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான
நான நா ] (2)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.