Song lyrics

Meenae meenae meenammaa Lyrics

மீனே மீனே மீனம்மா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Meenae meenae meenammaa

Lyrics

Meenae meenae meenammaa Lyrics

மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..
மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..


என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்
பார்வைக்கு ஒருவன் சிலையானான்
பேச்சுக்கு ஒருவன் மொழியானான்
பெண்மைக்கு அவனே துணையானான்
என் தோட்டத்தில் காவல் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா
மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..


அவன் ஆடவைத்தான் என்னை தேராக
ஓட வைத்தா என்னை நீராக
சூடி விட்டானே மலராக
துள்ள வைத்தானே மானாக
தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா
சொல்லடி சொல்லடி யாரம்மா
மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
சங்கதி சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people