Song lyrics

Alolam Alolam Lyrics

ஆலோலம் ஆலோலம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
G. Ramanathan
Year
1955
Singers
S. C. Krishnan
Lyricist
T. N. Ramiah Das
Alolam Alolam

Lyrics

Alolam Alolam Lyrics

ஆலோலம்.........ஆலோலம்......
பட்டி மாடே......கஞ்சித் தொட்டி மாடே...
பயிரையெல்லாம் ஸ்பாயில் பண்ணாதே
ஆலோலம்.......ஆலோலம்...

இஷ்டம் போலே வந்து மேயாதே
சென்ஸில்லாமல் வந்து பாயாதே
செம்மறியாடே தேட்டை போடும் ஆடே
ஜல்தி ஓடு வெள்ளைத்தாடி ஆடே
ஆலோலம்........ஆலோலம்.......

மார்க்கத்தில் கண்ட என் வள்ளியின்
அட்ரஸை...மறக்காமலே சொல்லடா...
கொடுக்க மாட்டேனென்று
சொல்லி விட்டாளடா
மாறு வேடத்துடன் செல்லடா.....

ஆடு ஓட்டும் பெண்ணே – ஆவியே உன்
அம்பர் பொட்டு தேவியே உன்
ஐம்பர் வெட்டு பாவி என்னை புத்திக் கெட்டு
காவி கட்டச் சொல்லுதடி ஆடு ஓட்டும் பெண்ணே

ப்ராடு செய்யும் மூடா போடா
பேதை என்னைத் தாலி கட்டும்
பேடி போல ஓடி வந்து
போதை மீறிப் பேசலாமோ
பாதர் வரும் நேரமாச்சு
ப்ராடு செய்யும் வேடா போடா....

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people