Song lyrics

Poo Virinchachu Lyrics

பூ விரிஞ்சாச்சு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Deva
Year
2000
Singers
Anuradha Sriram, P. Unnikrishnan
Poo Virinchachu

Lyrics

Poo Virinchachu Lyrics

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வை ருசி கண்டேன்
நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு
இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே
பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வை ருசி கண்டேன்

பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள்
பூ பூத்து வைத்து காத்து இருங்கள்
திருமண மாலைக்கு தேதி சொல்லி பறித்துக்கொள்வோம்
தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள்
தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள்
திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம்
மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள்
நீராட பன்னீரை தான் தூவுங்கள்
முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு
முத்து குளித்தாய் நெஞ்சோடு நெஞ்சோடு
மொத்தத்தில் உன்னை கொடு
பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வை ருசி கண்டேன்

நான் மௌனங்களில் கவி படித்தேன்
நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய்
நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு நீ பறித்தாய்
என் கனவுகளின் உருவங்களை
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்
வலைகளின் ஒலிகளில் வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய்
உன் மார்பு சுத்தாத குற்றாலமே
உன் பேரை சொன்னாலும் சங்கீதமே
முத்தம் கொடுப்பேன் சொல்லாதே சொல்லாதே
சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே
உன் கைகள் இடம் மாறுதே
பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வை ருசி கண்டேன்
நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு
இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people