Song lyrics

Poove Ilaiya Poove Lyrics

பூவே இளைய பூவே பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1982
Singers
Malaysia Vasudevan
Lyricist
Vairamuthu
Poove Ilaiya Poove

Lyrics

Poove Ilaiya Poove Lyrics

பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் நிலையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் நிலையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே …. எனக்கு தானே
பூவே இளைய பூவே..

இளம் சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
இளம் சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது…
இனிக்கும் தேனே ….. எனக்கு தானே….
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மடிமீது தேங்கும் தேனே
எனக்குதானே….எனக்குத்தானே… எனக்குத்தானே.
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people