மல்லி பூ பாடல் வரிகள்

Last Updated: Dec 04, 2024

Movie Name
Vendhu Thanindhadhu Kaadu (2022) (வெந்து தணிந்தது காடு)
Music
A. R. Rahman
Year
2022
Singers
A. R. Rahman, Madhushree
Lyrics
Thamarai
ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து
முத்தம் தர போற

நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன்

ஹேய் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற

வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோலி தேடி போன காணாத தூரம்
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்

சிங்க் சிங்க் சிங்க் சிக்கா ..(2)

ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற

பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
முத்தம் தர போற போற போற
பத்து தல பாம்பா..ஒய்
முத்தம் தர போற மச்சான்
ஹே மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ எப்போ
மச்சான் எப்போ போக போற
பெண் : தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்

அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல்
வந்து சேரும்

ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
உத்தரத்த பாத்தே நானும் விக்கி விட போறேன்

அட எத்தன நாள் ஏக்கமிது
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே
துணி காயுதே

கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.