Song lyrics

Malai Kovil Vaasalil Lyrics

மலை கோயில் வாசலில் பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1994
Singers
Mano, Swarnalatha, Vaali
Lyricist
Vaali
Malai Kovil Vaasalil

Lyrics

Malai Kovil Vaasalil Lyrics

பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

ஆண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே (இசை)

பெண்குழு : ஓ....ஓ... ஓ...ஓ..

***

பெண் : நாடகம் ஆடிய பாடகன்.. ஓ...
நீ இன்று நான் தொடும் காதலன்..ஓ...

ஆண் : நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

பெண் : தேர் அழகும் சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா உடன் வாராதா

ஆண் : மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா இசை கூட்டாதா

பெண் : பாலாடை இவன் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்

ஆண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே
ஆண் &
பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே (இசை)

பெண்குழு : ஓ....ஓ... ஓ...ஓ.... ஓ...ஓ....

***

ஆண் : நான் ஒரு பூச்சரம் ஆகவோ..ஓ..
நீள் குழல் மீதினில் ஆடவோ..ஓ..

பெண் : நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ

ஆண் : நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்

பெண் : பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்

ஆண் : மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்

பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே

ஆண் : விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
ஆண் & பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
ஆண் & பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people