ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா பாடல் வரிகள்

Last Updated: Jan 22, 2025

Movie Name
Tamil Devotional (2013) (பக்திப்பாடல்கள்)
Music
Randoms
Year
2013
Singers
P. Susheela
Lyrics
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கண்டிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய
சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்
அம்பிகை பைரவி

சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி

திருவருள் தருவாள் தேவி

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா

கருணையில் ககை கண்ணணின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
அருள்மழை பொழிவாள் நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.