சண்ட வீரச்சி பாடல் வரிகள்

Last Updated: Dec 27, 2024

Movie Name
Gatta Kusthi (2022) (கட்டா குஸ்தி)
Music
Justin Prabhakaran
Year
2022
Singers
Kedakuzhi Mariyamma
Lyrics
Vivek (lyricist)
பூனைக்கு மணிய கட்ட
புலியா வந்துட்டா!
யானைக்கு கரும்ப போல
ஒருத்தன் சிக்கிட்டான்

பொண்ண அடக்கி வச்சாலே
எம்மம்மா
பையன் அலறிபுட்டானே
போதும்மா

பொண்ணு கலக்கிபுட்டாளே
எம்மாமா
அவன் கலங்கிபுட்டானே

ஒண்டிக்கொண்டி பாக்கும்
சண்ட வீரச்சி
முட்டுக்கட்டை தூக்கி
கர்ல சுத்துச்சு….

யோ ..யோ
கிளவுஸ் ரெண்டு மாட்டி
ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி
தட்டா போற பேட்டி
யு சாவினிஸ்ட் கியுட்டி

அடக்கி வைக்க வந்தவன
மடக்கி குத்தனும்
முறுக்கி வச்ச மீசையா
நறுக்கி கொட்டனும்…

பூனைக்கு மணிய கட்ட
புலியா வந்துட்டா!
யானைக்கு கரும்ப போல
ஒருத்தன் சிக்கிட்டான்

…………………

பொண்ணு போடும் டிரெஸ்-குள்ள
கெளவுரவத்த எவன்டா தச்சான்
தல மயிர வெட்டி போட்ட
நாகரீகம் நட்டுக்கிச்சிச்சாம்

ஏய் போங்கடா டேய்

ஆண தூக்கி முன்னே வச்சு
பொண்ண தூக்கி பின்ன வச்சான்
புலி அடிச்ச முறத்த புடிங்கி
கோழிக் கூடப் பின்ன வச்சான்

ஆட்டி படைக்கிற ஆள் எல்லாம்
ஓட்டம் எடுக்கணும்

ஓடுறா… ஓடுறா…
ஓடுறா… டேய்

கூட்டி பெருக்குற வேலைக்கும்
கூட இருக்கிறோம்

அங்க சுத்தி இங்க சுத்தி
சேச்சிகிட்ட சிக்கிகிட்டான்
சித்தெறும்ப சீண்ட பாத்து
சிங்க பல்ல குத்திப்புட்டான்

ஒண்டிக்கொண்டி பாக்கும்
சண்ட வீரச்சி
முட்டுக்கட்டை தூக்கி
கர்ல சுத்துச்சு….

கொன்னு புடுவேன்

கிளவுஸ் ரெண்டு மாட்டி
ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி
தட்டா போற பேட்டி
யு சாவினிஸ்ட் கியுட்டி

அடக்கி வைக்க வந்தவன
மடக்கி குத்தனும்
முறுக்கி வச்ச மீசையா
நறுக்கி கொட்டனும்…

ஹேய்

பூனைக்கு மணிய கட்ட
புலியா வந்துட்டா!
யானைக்கு கரும்ப போல
ஒருத்தன் சிக்கிட்டான்

ஹேய்

 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.