Song lyrics

Mannana Poranthavuga Lyrics

மன்னனா பொரந்தவுக பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Ilaiyaraaja
Year
1998
Singers
Pushpavanam Kuppusamy

Lyrics

Mannana Poranthavuga Lyrics

மன்னனா பொரந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொரந்தவுக அரிசிக்காக நிக்குறாக
மன்னனா பொரந்தவுக மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொரந்தவுக அரிசிக்காக நிக்குறாக
அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொரைப்பானே
அரிசி பருப்ப அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு மண்ணெண்ணை அளவ கொரைப்பானே
 லிட்டருக்கு ஐநூறு வீடு வந்து சேராது
ரேசணுல கோளாறு கேட்பது யாரு

 சோதனைக்கு மந்திரி வந்தா ரேசன் கடை ரெண்டு படும்
மந்திரிக்கு சோதனை வந்தா எங்க போயி கொண்டு விடும்
சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது
எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது
சாதனையின் பட்டியல் மட்டும் கொறையாது
ஏழை எங்க வேதனைய லிஸ்ட்டு போட முடியாது
 சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது
மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு
சட்டம் போடும் சர்க்காரு ஊரு வந்து சேராது
மானங்கெட்ட நம்மூரு கேட்பது யாரு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people