Song lyrics

Jaliyana Jodikala Lyrics

ஜாலியான ஜோடிகளா பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Vedha
Year
1963
Singers
P. Susheela
Lyricist
Vaali
Jaliyana Jodikala

Lyrics

Jaliyana Jodikala Lyrics

ஜாலியான ஜோடிகளா
ஜாலியான ஜோடிகளா
காலியான மூளைகளா
குடும்பவனின் காளைகளா......

கரு நாவல் பழம் போலே இருப்பாரு இவர்
ஒரு வாரம் குளிக்காம வருவாரு
பானையிலே வைச்சிருக்கும்
பழஞ் சோத்தை பார்த்து ஒரு
பருக்கை விட மாட்டேன்னு தின்னாரு
நேத்து தின்னாரு.....(ஜாலியான)

என்னடியம்மா பருவதம்
உனக்கு கூடவா திருமணம்
ஆம்பளை எல்லாம் சேலைக் கட்டி
அடுப்பை மூட்ட சொன்னே நீ
வீம்புல சொன்ன வார்த்தை போயி
வம்புல மாட்டி நின்னே...(ஜாலியான)

எப்படி இருக்குதுங்க ஒடம்பு
எப்படி இருக்குதுங்க
முப்பது பல்லு இருந்துதுங்க இப்ப
மூணோ ரெண்டோ இருக்குதுங்க
பொழுது விடிந்ததும் எழுந்தீங்க நீங்க
புல்லு தடிக்கியே விழுந்தீங்க.....(எப்படி)

எரிஞ்சு போன மம்முதனாரு
இப்படி வந்தாரோ அது
தெரிஞ்சு போயி ரதியும் கூட
இப்படி வந்தாளோ

சிக்கனமாக பெத்துக்கணும் நான்
சொன்னத நீங்க ஒத்துக்கணும்
பக்குவமாக வாழுங்க இந்த
பாட்டி சொன்னத கேளுங்க...(ஜாலியான)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people