Song lyrics

Naan Pogiren Lyrics

நான் போகிறேன் மேலே மேலே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
James Vasanthan
Year
2010
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyricist
Thamarai
Naan Pogiren

Video

Naan Pogiren

Lyrics

Naan Pogiren Lyrics

நான் போகிறேன் மேலே மேலே 
பூலோகமே காலின் கீழே 
விண்மீன்களின் கூட்டம் என் மேலே 
பூவாளியின் நீரைப்போலே 
நீ சிந்தினாய் எந்தன் மேலே 
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே 
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் 
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் 
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் 
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் 

நான் நான நன் நானன் நானா
நான் நான நன் நானன் நானா
நான் நான நன் நானன் நானா நா....
 
நான் போகிறேன் மேலே மேலே 
பூலோகமே காலின் கீழே 
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே 
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே 
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் 
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் 
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் 
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்  

நான் நான நன் நானன் நானா
நான் நான நன் நானன் நானா
நான் நான நன் நானன் நானா நா...

கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச 
யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால் ஐயோ 
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும் 
அறையினுள் நீ வந்தாய் 
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ 

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் 
பூ மாலை செய்தேன் வாடுதே 
என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ 
வாராதோ அந்நாளும் இன்றே ஹா.. 

நான் நான நன் நானன் நானா
நான் நான நன் நானன் நானா
நான் நான நன் நானன் நானா நா ஆஆ...

என் தூக்கம் வேண்டும் என்றாய் 
தரமாட்டேன் என்றேனே 
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய் 
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே 
மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய் 

அன்றாடம் போகும் பாதையாவும் 
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் 
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே 
ஏ ஏ கால்நோக கால்நோக நின்றேன். 

நான் போகிறேன் மேலே மேலே 
பூலோகமே காலின் கீழே 
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே 
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே 
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் 
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் 
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் 
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் 

நான் நான நன் நானன் நானா
நான் நான நன் நானன் நானா
நான் நன்னன் நன் நன்னன் நானா
நான நான நன நன்னன் நானா நா..... ஆஆஆ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people