Song lyrics

Kannale Miya Miya Lyrics

கண்ணாலே மியா மியா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vidyasagar
Year
2001
Singers
Unni Menon
Kannale Miya Miya

Lyrics

Kannale Miya Miya Lyrics

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

காதலா சுட்டிப் பையா... இழுக்குதே கண்கள் கையா 
இனிக்குமே முத்தக் கொய்யா... இதழலின் ஓரம் தேவையா 

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

பாதிக்கண்ணால் மூடும் மீதிக் கண்கள் தேடும் 
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அல்லோ 
பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும் 
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ 

முதல் முதல் எழுதும்... ஹோய் தேர்வின் பயம்தான் 
உயிரினில் நுழையும் ஹோய் நேரம் இதுதான் 
ஹேய் கொஞ்சம் சும்மாயிரு பக்கம் வந்தால் வம்பாயிது
இமை ஒட்டி கிள்ளும் இதழ் திட்டி தள்ளும் 
விரல் கட்டி கொள்ளும் ஒரே நிழல் நெஞ்சம் 

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

தீயை தின்னும் நேரம் தேகம் எங்கும் ஈரம் 
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ 
காமன் கட்டில் ஆடும் மூச்சின் வெப்பம் கூடும் 
ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ 

தலையணை முழுதும் ஹோய் கூந்தல் அலைதான் 
இருபது விரலும் ஹோய் தீயின் இணைதான் 
ஹேய் என்னை தீண்டாதிரு 
தொட்டால் என்னை தள்ளாதிரு தள்ளாதிரு 
கண்கள் ரெண்டும் பள்ளம் வேர்வை கொட்டி வெல்லும் 
கட்டில் வெப்பம் செல்லும் ஒரே நிழல் நெஞ்சம் 

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people