Song lyrics

Nee Mutham Ontru Koduththal Lyrics

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Mani Sharma
Year
2007
Singers
Ranjith, Swetha Mohan
Lyricist
Na. Muthukumar
Nee Mutham Ontru Koduththal

Video

Nee Mutham Ontru Koduththal

Lyrics

Nee Mutham Ontru Koduththal Lyrics

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஓவ் ஓவ் ஓவோவ்வா

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஓவ் ஓவ் ஓவோவ்வா

செங்காந்த இதழ் என்பதில் நான் கண்டேன்
இயற் தமிழ் மின் காந்த பேச்சில்
மொத்தமாய் நான் கேட்டேன்
இசை தமிழ் நீ கொஞ்சம் நாடக தமிழ்
நீ கொஞ்சம் மன்மத தமிழ்
உன் தமிழ்
என் தமிழ்
T-A-M-I-L தமிழ்

அன்பே உன் இதழின்
சிணுங்களெல்லாம்
பிள்ளை தமிழே
பிள்ளை தமிழே
அங்கங்கே உனக்குள்
படித்து கொண்டேன்
சங்க தமிழே
சங்க தமிழே

நீ என்னை தீண்டினால்
என் மேனி உன்னோட தமிழ்
ஒஹ் ஹோ ஹோ
நம் காதல் சேர்ந்த பின்
தமிழோடுதான் நாங்கு தமிழ்
ஒஹ் ஹோ ஹோ
உனை வாசித்தேன்
நேசித்தேன்
சுவாசித்தேன்
யாசித்தேன்
ஓவ் ஓவ் ஓவோவ்வா

உன் ஒற்றை விழி பார்வையில்
நான் கற்றுகொண்டேன் தமிழ்
உன் கற்றை ஒளி புன்னகையில்
அதில் ஒற்றி கொண்டேன் தமிழ்
உன் வயசின் மொத்தம் தமிழ்
உன் அழகின் மொத்தம் தமிழ்
நீ தமிழ்
நான் தமிழ்
T-A-M-I-L தமிழ்


என் வாசம் தெரிக்கும் இளமைஎல்லாம்
கன்னி தமிழே
கன்னி தமிழே
உன் வாசம் கிடைத்த மறு வருஷம்
அன்னை தமிழே
அன்னை தமிழே
காலங்கள் தீரலாம்
தீராதடி காதல் தமிழ்
ஓ ஹோ ஹோ…
நரை கூடி போகலாம்
மாறாதடி ஆசை தமிழ்
ஓ ஹோ ஹோ…
உன்னை சந்தித்தேன் (உன்னை சந்தித்தேன்)
திதித்தேன் (திதித்தேன்)
ஜீவித்தேன் (ஜீவித்தேன் )
உயிர்த்தேன் தேன் (தேன் தேன்)
ஓவ் ஓவ் ஓவோவ்வா…
கண் கண்ணும் ஒட்டிக்கொண்டபின்
இரு விண்ணும் மண்ணும் தமிழ்
மெய் மெய்யும் சேர்ந்து புன்னகை
அதில் மையல் கொள்ளும் தமிழ்
உடல் பெற்றதிந்த தமிழ்
உயிர் கற்றதிந்த தமிழ்
உன் தமிழ்
என் தமிழ்
T-A-M-I-L தமிழ்

நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால்
செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள்
பைந்தமிழ்
ஓவ் ஓவ் ஓவோவ்வா…
னா னா னா

நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால்
செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள்
பைந்தமிழ்
ஓவ் ஓவ் ஓவோவ்வா… 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people