Song lyrics

Nee Uravagaa Aasai Lyrics

நீ உறவாக ஆச பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ajeesh
Year
2017
Singers
Hariharan, Shreya Ghoshal
Nee Uravagaa Aasai

Lyrics

Nee Uravagaa Aasai Lyrics

நீ உறவாக ஆச.
நா வேறென்ன பேச.
புயல் ஓயாம வீச.
உடல் தானாக கூச.
கேட்டேன் காதல் ஓச.

நீ உறவாக ஆச.
நா வேறென்ன பேச.

ஓர கண் பார்வை!
ஏதேதோ பேச!
ஊதாரி பையன் நானும்,
ஆனேன் நல்லா,

நாளும் உன் வாசம்,
என் மேல வீச
ஆனேனே கோரபுல்லும்
வானவில்லா

கண்ணால நீ கிள்ள,
காயம் உள்ள,
என்னாத நான் சொல்ல,
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ..

சொல்லாமலே தொல்ல,
ஆள கொல்ல.
அல்லாடுரேன் புள்ள..
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ..

குப்ப கூளம் பொன்னாச்சு
குட்டியான தேராச்சு.
ஆத்தாடி உன்னால,
ஏதோ ஆச்சு,

சோறும் செல்லாம
தூக்கம் இல்லாம,
ஏன் புள்ள என்ன நீயும்,
ஆட்டி வெச்ச,

கேட்கும் முன்னால,
நீயும் தன்னால
ஒன்னாக வாழ போடு
காதல் பிச்ச

என்னோடு நீ வந்தா,
போதும் பொன்னே
இல்லேன்னு நான் சொன்னா
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ..

சேல கட்டும் பூங்கொத்து!
உன்கூட நின்னா தான் கெத்து
வேணாமே வேறேதும்
சொத்து பத்து

நீ உறவாக ஆச.
நா வேறென்ன பேச.
புயல் ஓயாம வீச.
உடல் தானாக கூச.
கேட்டேன் காதல் ஓச.

நீ உறவாக ஆச.
நா வேறென்ன பேச.
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people