Song lyrics

Pullai Thinnum Lyrics

புல்லு திங்கும் புள்ள தாச்சி பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
A. R. Rahman
Year
1996
Singers
Sumangali
Lyricist
Vairamuthu
Pullai Thinnum

Lyrics

Pullai Thinnum Lyrics

புல்லு திங்கும் புள்ள தாச்சி
பொட்டு வச முத்துப் பேச்சி
வள காப்பு செஞ்சு வப்போம் வாங்க

குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க

பசுமாட்டுக்கு வாழ காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு

பசுமாட்டுக்கு வாழ காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு

புல்லு திங்கும் புள்ள தாச்சி
பொட்டு வச முத்துப் பேச்சி
வள காப்பு செஞ்சு வப்போம் வாங்க

குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க

சுத்தம் உள்ள பாலு
பித்தம் என்னு கண்டும்
சாதி பேதம் இல்லாம குடிக்கிறீக

வெள்ளப் பசு சிந்தும்
கோமியத்த அள்ளி
வீடு வாசல் எல்லாமும் தெளிக்கிறீக

கொண்டாட்டம் பசு பொட்டக் கண்ணு போட்டா
கொண்டாட்டம் ஒரு பொட்ட புள்ள பொறந்தா

திண்டாட்டம் இனி போட்டியா பொறந்து
வந்தாலே நான் பசுவா பொறக்கணும்

புல்லு திங்கும் புள்ள தாச்சி
பொட்டு வச முத்துப் பேச்சி
வள காப்பு செஞ்சு வப்போம் வாங்க

குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க

சந்தனத்த அப்பி குங்குமத்த வச்சி
கொம்பா சுத்தி செவ்வந்தி பூவு முடிங்க

கால நேரம் பார்த்து
கால் வளவி இட்டு
முக்காம புள்ளப் பெற வரம் கொடுங்க

அம்மாடி இந்த பொட்ட மாடு
என்னைக்குமே நம்மாளு

ஒரு பொட்டக் கண்ணு போடச் சொல்லி
நீ கேளு

கொஞ்ச பொறுத்துக்க வரப்போது
சீம்பாலு அந்த ருசியோ ருசியடி

புல்லு திங்கும் புள்ள தாச்சி
பொட்டு வச முத்துப் பேச்சி
வள காப்பு செஞ்சு வப்போம் வாங்க

குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க

பசுமாட்டுக்கு வாழ காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு

பசுமாட்டுக்கு வாழ காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people