Song lyrics

Manathil Konda Aasaikalai Lyrics

மனதில் கொண்ட ஆசைகளை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
K. V. Mahadevan
Year
1962
Manathil Konda Aasaikalai

Lyrics

Manathil Konda Aasaikalai Lyrics

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

விதைப்பதெல்லாம்முளைப்பதில்லைமண்ணின்மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே

மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே
ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே

உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people