Song lyrics

Mounam Pesum Lyrics

மௌனம் பேசும் வார்த்தை யாவும் பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
M. Ghibran
Year
2004
Singers
K. S. Chithra
Lyricist
P. Vetriselvan
Mounam Pesum

Lyrics

Mounam Pesum Lyrics

மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பிரிவென்று ஏதும் இல்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயே

ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் பேசுதே
காலமே கைகொடு
காதல் காதல் எந்நாளும் நீள
இனிதான வாழ்வில் சேர
ஓ.. ஒரு நூறு ஆயுள் வாழ

மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே

அலைகள் போலவே
காதல் மோதுமே
சேருமா ஓர் கரை
மோதும் மோதும் ஓயாமல் மோதும்
ஓர்நாளும் சேர்ந்தே தீரும்
ஓ.. ஆனாலும் வந்தே சேரும்….

ஆசை ஆசை கொண்டு

ஓசை ஓசை இன்றி

நாளும் நானும் வருவேன்

கோடி கோடி யுகம்

நாடி நாடி வந்து

சேவை சேவை புரிவேன்

மௌனம் பேசும் வார்த்தை யாவும்

ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே

காலம் செய்யும் மாயம் போதும்

சூடாத பூக்களும் வாடிடுதே

பிரிவென்று ஏதும் இல்லை

உயிரென்று ஆன பின்னே

நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே

மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயே

ஆசை ஆசை கொண்டு

ஓசை ஓசை இன்றி

நாளும் நானும் வருவேன்

கோடி கோடி யுகம்

நாடி நாடி வந்து

சேவை சேவை புரிவேன்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people