Song lyrics

Aavarame Devarame Lyrics

ஆவாரமே தேவாரமே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Guna Singh
Year
1989
Singers
S. P. Sailaja, S. N. Surendar
Lyricist
Anbu Kani
Aavarame Devarame

Lyrics

Aavarame Devarame Lyrics

ஆண் : ஆவாரமே தேவாரமே
ஆவாரமே தேவாரமே
என் அக்கா பெத்த பூவாரமே
என் அக்கா பெத்த பூவாரமே

பெண் : ஆவாரமோ தேவாரமோ
ஆவாரமோ தேவாரமோ
உன் அக்கா பெத்த பூவாரமோ
உன் அக்கா பெத்த பூவாரமோ

ஆண்: உன் காலோடு கொலுசாட நீயாடும் போது
பெண் : பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம்
ஆண் : புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு
பெண் : புல்லரிச்சா சத்தமிடு
ஆண் : ஆஹா...ஆவாரமே தேவாரமே
ஆஹா....ஆவாரமே தேவாரமே..

ஆண் : ஆகாயமே ஆபாசம்தான்
வெக்கம் எல்லாம் வேலி வேஷந்தான்
பெண் : சேலையில்லா நட்சத்திரம்
செவ்வானத்தில் முத்துச்சரம்

ஆண் : இந்திரன இழுத்து வந்து
இன்பமெல்லாம் கத்துக் கொடு
பெண் : மந்திரத்தில் ஏங்க வச்சு
மன்மதன வாங்கி விடு

ஆண் : ஆங்..தத்தி தத்தி நீ நடந்தா
தாங்கதம்மா என் மனசு
தானாக தரமோ தேன் முத்தங்கள்
பெண் : நானாக தருவேன் தேன் முத்தங்கள்
ஆண் : ஆஹா ஆவாரமே தேவாரமே
ஆஹா ஆவாரமே தேவாரமே

ஆண் : சந்திரனும் முகம் பார்க்க
சாயங்காலம் தலைக் குனிய
பெண் : நந்தவனப் பூ விரியும்
நாலு பக்கம் தேன் சிதறும்

ஆண் : அந்தி நேரம் முத்தம் சிந்தி
ஆசைத் தீர காத்தடிக்கும்
பெண் : பூஜை செய்ய பூப்பறிச்சா
பூவுக்குள்ளே ஊத்தெடுக்கும்
ஆண் : அடி தாலியென்ன வேலி என்ன
தாண்டி வரும் வேளையிலே
தானாக தருமோ தேன் முத்தங்கள்
பெண் : நானாக தருவேன் தேன் முத்தங்கள்

ஆண் : ஆஹா ஆவாரமே தேவாரமே
ஆஹா ஆவாரமே தேவாரமே
என் அக்கா பெத்த பூவாரமே
என் அக்கா பெத்த பூவாரமே

பெண் : ஆவாரமோ தேவாரமோ
ஆவாரமோ தேவாரமோ
உன் அக்கா பெத்த பூவாரமோ
உன் அக்கா பெத்த பூவாரமோ

ஆண்: உன் காலோடு கொலுசாட நீயாடும் போது
பெண் : பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம்
ஆண் : புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு
பெண் : புல்லரிச்சா சத்தமிடு

ஆண் : ஆஹா..ஆவாரமே தேவாரமே
பெண் : ஆஹா....ஆவாரமோ தேவாரமோ..
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people