Song lyrics

Thaniyee Thannanthaniye Lyrics

தனியே தன்னந்தனியே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
A. R. Rahman
Year
2000
Singers
Shankar Mahadevan
Lyricist
Vairamuthu
Thaniyee Thannanthaniye

Video

Thaniyee Thannanthaniye

Lyrics

Thaniyee Thannanthaniye Lyrics

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்

நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்

நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்

புரியாதா…பேரன்பே…புரியாதா…பேரன்பே

ஓஹ்…தனியே…தனியே…தனியே…

அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய (2)

அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்

அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)

ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)

நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்

நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்

புரியாதா…பேரன்பே…புரியாதா…பேரன்பே

புரியாதா…

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்

ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்

அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் (2)

சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் (2)

மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது

தனியே…

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்

நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்

புரியாதா…பேரன்பே…புரியாதா…
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people