Song lyrics

Raathiri Neram Lyrics

ராத்திரி நேரம் ரயிலடி பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1991
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Raathiri Neram

Video

Raathiri Neram

Lyrics

Raathiri Neram Lyrics

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்…
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்..
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்

ஆண் : ஹா..

பெண் : நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : ஆஹா ஹாஹ ஹா.. ஹஹ்ஹ...

***

ஆண் : தேனாறு இது தான் தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா

பெண் : நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான் இடம் தரும் சீராட வா

ஆண் : முத்தம் பதிப்போம் அரங்கேறும்
முதல் பாடம் அது

பெண் : நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாறும் அது

ஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்

ஆண் : ஆஹ...

பெண் : நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : அய்யோ..ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்....

***

பெண் : ஆஹா ஹாஹ ஆ..ஹா..ஆ..
ஆஹ ஹாஹ ஆ..ஹா..ஆ..ஹஹ..ஆ.ஹஹ
மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது

ஆண் : பூபாணம் விடத்தான்
புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க
உடல் மனம் தெம்பானது

பெண் : இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..

ஆண் : இந்த கிளி தான் சுவை பார்க்க படைத்தானே கனி

பெண் : மாலை சூடி முடித்தேன் மையல் தீர துடித்தேன்
பாய் தான் போட

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்

ஆண் : ஐயோ..ஹஹ்ஹஹ..

பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்

ஆண் : ஹ்ஹா..ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்..வா..
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people