Song lyrics

Kai Valikkuthu Kai Valikkuthu Lyrics

கை வலிக்கிது பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1985
Singers
Malaysia Vasudevan, S. Janaki
Kai Valikkuthu Kai Valikkuthu

Lyrics

Kai Valikkuthu Kai Valikkuthu Lyrics

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா 
ஹஹ்ஹ...கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா 
நான் இழுத்தரைக்கிற போது கை பழுத்திருக்குது பாரு 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏன்யா 

அம்மி ப்பது பொம்பள வேல தாண்டி.... ஹா 
அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏண்டி... ம்க்கும் 
அம்மி இழுத்தரைக்கிற போது நெஞ்சை இழுத்தரைக்கிற மானே 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏண்டி 

ஹ்.ஆ...கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஹ்ஹஹ
ஒரு கை புடிக்கணும் அம்மி க்கணும் மாமா ஹ்..ம்..


நாந்தான் தனியா என்னதான் பண்ணுறது 
சோறு கொழம்பு எப்ப தான் பொங்குறது 
மாடாட்டம் வேலை செய்ய என்னால ஆவாது 
மாமா நீ ஒத்துழைச்சா எம்மேனி நோவாது 
ஆளாகி நான் சமஞ்சபுள்ள ஆனாலும் நான் சமைச்சதில்லை 
கண்ணாலம் கட்டாமலே குடித்தனமா ஆயாச்சு

அம்மி அரைப்பது ஏய்..அம்மி அரைப்பது பொம்பள வேலை தாண்டி.... 

ம்..ஹ்ஹ

அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏண்டி...

மாமா..

அம்மி இழுத்தரைக்கிறபோது நெஞ்சை இழுத்தரைக்கிற மானே 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏண்டி 

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா ஆ..


அம்மா தாயே முடிஞ்சா பாடுபடு

அலுப்பும் சலிப்பும் இருந்தா ஆள விடு

பொல்லாத கோவமென்ன கண்ணான ராசாவே

வேணாண்ணு தள்ளி வச்சா ஹ்ஹ..வாடாதோ ரோசாவே

மானே வா பொய் கோவந்தாண்டி 
தேனே வா ஒரு தாபந்தாண்டி 
கண்ணே நீ கஷ்டப்பட்டா எம்மனசு தாங்காது 

கை வலிக்கிது ஹஹ்ஹ..கை வலிக்கிது மாமா

அட அம்மி அரைச்சிட நானிருக்கிறேன் வாம்மா

அட ஒண்ணாகத்தான் நாமே சேர்ந்து அம்மி அரைப்போமே 
ஒண்ணாகத்தான் நாமே சேர்ந்து அம்மி அரைப்போமே

கை வலிக்கல கை வலிக்கல மாமா

ஹா .......

ஹஹ்ஹ..இப்ப..கை வலிக்கல கை வலிக்கல


ஹஹ்ஹ...ஹஹ்ஹ...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people