Song lyrics

Kondaiyil Thaazhampoo Lyrics

கொண்டையில் தாழம்பூ பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Deva
Year
1992
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Kondaiyil Thaazhampoo

Video

Kondaiyil Thaazhampoo

Lyrics

Kondaiyil Thaazhampoo Lyrics

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

ஆண் : ஆ..ஹா..

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

பெண்குழு : பாப பாப பா...பாப பாப பா...
பாப பாப பா...பாப பாப பா...

***

ஆண் : பஞ்சுமெத்தை கால் முளைச்சு நடந்து வந்ததை போல
நீ சுத்தி வந்து இழுக்குறியே சும்மா கெடந்த ஆளை

ஆண் : ஆ...அஹ்ஹா...ஹெய் ஹெய்...அஹ்ஹாஅ

பெண் : கன்று கண்டா கயிரருக்கும் கரா பசுவ போல
நீ எடுக்க வண்ட வழுக்குடய்ய இழுது கட்டிய சேல

ஆண் : கண்டாகி சேலையாக மாறவா
ஓன் கண்ணாடி மேனிதொட்டு மூடவா

பெண் : கல்யாணதாலி கட்டிபுட்டு கட்டில் மேலாடு ஜல்லிகட்டு

ஆண் : ஆனி வந்தா தாலி வந்து
கட்டுவேன் சத்தியம் இன்னும் என்ன பத்தியம்

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

***

பெண் : மின்னல் போல நீ நடக்கும் சுறுசுறுப்ப பாத்து
ஜன்னல் திறந்து கொண்டதைய்யா சனிக்கிழமை நேத்து
ஆ...அஹஹா...

ஆண் : தாஜ்மஹால் நடந்து வந்து தழுவிக்கொண்டதை பாத்து
அடி தண்ணியாக வேர்த்துபோச்சு சட்டயெல்லாம் நேத்து

பெண் : உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது
அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

ஆண் : கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்
கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

பெண் : அந்த யோகம் வந்து சேர்ந்தா
கண்களும் தூங்குமோ கட்டில் என்ன தாங்குமா

ஆண் : குஷ்பூ...குஷ்பூ...குஷ்பூ

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people