Song lyrics

Sudum Nilavu Lyrics

சுடும் நிலவு சுடாத சூரியன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vidyasagar
Year
2006
Singers
Harini, P. Unnikrishnan
Lyricist
Vairamuthu
Sudum Nilavu

Lyrics

Sudum Nilavu Lyrics

ஆண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
{ எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா } (2)

பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

ஆண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்

ஆண் : இமையடித்தாலும்
இதயம் வலிக்கும் வலிகளில்
கூட வாசனை இருக்கும்

பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

பெண் : நரம்புக்கு நடுவே
நதிகள் நகரும் நதியிருந்தாலும்
நாவே உலரும்

ஆண் : தப்பு எல்லாம்
கணிதமாகும் தவறு
எல்லாம் புனிதமாகும்

பெண் : பச்சைத் தண்ணீர்
வெப்பமாகும் எச்சில்
பண்டம் அமிர்தமாகும்

ஆண் : நாக்கு உதடு பேசும்
வார்த்தை முத்தமாகும்

பெண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்

பெண் : ……………………….
ஆண் : ……………………….

பெண் : மழைத்துளி நமக்கு
சமுத்திரமாகும் சமுத்திரம்
எல்லாம் துளியாய்ப் போகும்

பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

ஆண் : சத்தியக் காதல்
என்னவும் செய்யும்
சந்திர ஒளியை
ஆடையாய் நெய்யும்

பெண் : தொட்ட பாகம்
மோட்சமாகும் மத்த
பாகம் காய்ச்சலாகும்

ஆண் : தெய்வம் தேய்ந்து
மிருகமாகும் மிருகம் தூங்கி
தெய்வமாகும்

பெண் : தேடல் ஒன்றே
வாழ்க்கை என்று தெரிந்து
போகும்

பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people