Song lyrics

Mannathi Mannan Lyrics

மன்னாதி மன்னன்கள் கதை கேட்டு பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Deva
Year
1992
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Mannathi Mannan

Lyrics

Mannathi Mannan Lyrics

ஹ்ம்ம்ம்ம்..ம்ம்....ம்ம்...ஹ்ம்ம்...
மன்னாதி மன்னன்கள் கதை கேட்டு பாரு
சூராதி சூரன் நீ உனை வெல்ல யாரு
தலை மீது கீரிடம் தானாய் வந்து சேரும்
எங்கே போகும் வீரம்......(மன்னாதி)

வெள்ளை உள்ளம் வாய்த்த பிள்ளை வாடும் நேரம்
அன்னை போல காத்த தெய்வம் வந்து சேரும்
சூறை காற்றில் சாயும் கூரை வீடா வாழ்க்கை
குன்றை போல நின்று தொட்டு பாரு வானை

இதோ இங்கே ஆரம்பம் புதிய புரட்சிதான்
எங்கே போகும் வீரம்..ஹ்ம்ம்ம்ம்...(மன்னாதி)

பெத்து போட்டதில்லை பேரும் வைத்ததில்லை
தெய்வம் போல வந்தாள் தெய்வம் போல சென்றாள்
அன்பால் வந்த பாவம் வேறே என்ன சொல்ல
ஈன்ற தாயும் கூட இவள் போல அல்ல

பிள்ளை போல கொள்ளி வைக்க இல்லை யோகம்தான்
எங்கே போகும் வீரம்...ஹ்ம்ம்ம்..ஹ்ம்ம்..(மன்னாதி)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people