Song lyrics

Raja Raja Sri Lyrics

ராஜ ராஜ ஸ்ரீ பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. S. Viswanathan
Year
1967
Singers
L. R. Eswari, P. B. Srinivas
Lyricist
Kannadasan
Raja Raja Sri

Lyrics

Raja Raja Sri Lyrics

ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ராஜ போகம் தர வந்தான்

தேடிச்சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக்கொண்டது
பின்னிக்கொண்ட பூங்கொடி தேனை தந்ததது
தேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்தது
ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல
எழுந்த ராகம் ஒன்றல்ல எழுந்த தாளம் ஒன்றல்ல
பாடல் கொண்டு கூடல் கொண்ட தாளம் ஒன்றல்ல
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்

மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது
கன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது
பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல
அமர்ந்த வண்டும் வண்டல்ல
ஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
இடை ஒரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள
இதழ் ஒரு பாவமும் முகம் ஒரு பாவமும் சொல்ல

ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ராஜ போகம் தர வந்தான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people