Song lyrics

Yemma Yea Azhagamma Lyrics

எம்மா ஏ அழகம்மா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Harris Jayaraj
Year
2017
Singers
Bombay Jayashree, Haricharan
Lyricist
Madhan Karky
Yemma Yea Azhagamma

Lyrics

Yemma Yea Azhagamma Lyrics

எம்மம்மா அழகம்மா     
     
இருதயம் இருதயம் மெழுகம்மா     
     
எம்மா நீ அழகம்மா      
     
விரல்பட விரல்பட இளகம்மா     
     
எம்மம்மா அழகம்மா      
     
விழிகளில் நாணங்கள் விலகம்மா     
     
எம்மா நீ தமிழம்மா     
     
இவனது தாய்மொழி பழகம்மா     
     
எம்மமம்மம்மா மமமமமமமமம      
எம்மமம்மம்மா மமமமமமமமம     
எம்மமம்மம்மா மமமமமமமமம     
எம்மமம்மம்மா மமமமமமமமம     
     
யாரோ நீ எங்கிருந்து வந்தாய்     
என் நெஞ்சில் சிறகு தந்தாய்     
யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்     
என் கண்ணில் கனவு தந்தாய்     
ஒரு சில நொடி குழந்தையைப்போலே     
மறு சில நொடி கடவுளைப்போலே     
பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானாய்     

உயிரினை தரும் உதிரத்தை போலே
உயரத்தை தொடும் சிகரத்தை போலே
அனுதினதினம் அதனினும் பெரிதாய் நீயானாய்
     
எம்மா ஏ அழகம்மா     
இருதயம் இருதயம் மெழுகம்மா     
எம்மா நீ அழகம்மா     
விரல்பட விரல்பட இளகம்மா     
எம்மா ஏ அழகம்மா     
விழிகளில் ஆனந்தம் விலகம்மா     
எம்மா நீ தமிழம்மா     
இவனது தாய்மொழி பழகம்மா     
     
வேறேதோ தூயுலகம் ஒன்றில்      
இவனாலே பூக்கிறேனா     
ஊனில்லா மின்னுணர்வு ஒன்று     
இவனாலே பாய்கிறேனா     
இவனிடம் பணம் ஒரு துளி இல்லை     
மனிதரின் குணம் சிறு துளி இல்லை     
இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே     
திரை விலகிய மேடையைப்போலே     
பனி விலகிய கோடையைப்போலே     
மழை நனைத்திடும் ஆடையைப்போலே ஆனேனே      (எம்மா)
     
மரம் செடி கொடிகளை அனைத்தாயே     
மலர்களின் இதழ்களை துடைத்தாயே     
உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்     
வனங்களின் மகனெனப்பிறந்தாயே     
புலிகளின் மடியினில் வளர்ந்தாயே     
மான் என்னை நான் தந்தால் என் செய்வாய்     
வாராளே உன்னை உன்போல் ஏற்றேனே    ஆனாலும் உண்மை என்னென்றுக்கேட்டேனே     
உரைத்திடு யாரோ நீ      (யாரோ)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people