Song lyrics

Salomia Lyrics

சலோமியா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Deva
Year
1998
Singers
Deva
Lyricist
Deva
Salomia

Lyrics

Salomia Lyrics

சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா
வால மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

விரலோ நெத்திலி மீனு
கண்ணோ காரபொடி
முகமோ கெலுத்தி மீனு
மனமொ தென்னாகுனி
இது விலாங்குட கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
இது விலாங்குட கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு
இந்த கடலை கேளு அலைய சொல்லும்
தண்ணிய கேளு புது கதைய சொல்லும்
சலோமியா ஆஆ….
சலோமியா ஆஆ….

கிளிஞ்சல் சிரிப்புக்காரி
சங்கு கழுத்துக்காரி
இரவில் விளக்கு போடும்
லைட் ஹவுஸ் கண்ணு காரி
அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா
அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா
ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ தொட்டுபுட்டா அது உன் ஜான்சு
மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு

சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people