Song lyrics

Innum Ennai Lyrics

இன்னும் என்னை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyricist
R. V. Uthaya Kumar
Innum Ennai

Lyrics

Innum Ennai Lyrics

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே
தேவ சுகத்தேன் கனியே
மோகபரிபூரணியே

பெண் : பூவோடு தான்சேர இளங்காற்று போராடும் போது ..
சேராமல் தீராது இடம்
பார்த்து தீர்மானம் போடு

ஆண் : புது புது விடுகதை தொடத்தொடத் தொடர்கிறதே..

பெண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

உன்னைச் சேர்ந்தாள் பாவை
இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா..

***

பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே

ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத்தேனீ

பெண் : தடைகளை கடந்து
நீ மடைகளை திறந்திட வா...

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே..

பெண் : ஆஹா ! என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

பெண் : சொல்லு சொல்லு சிங்காரவேலா

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே

பெண் : என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ... அன்பே....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people