Song lyrics

Poraney Poraney Lyrics

போறானே போறானே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. Ghibran
Year
2011
Singers
Ranjith
Lyricist
Karthik Netha
Poraney Poraney

Lyrics

Poraney Poraney Lyrics

போறானே போறானே..

போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே (2)

அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல!

(போறானே போறானே)

பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்
மழையில் நனைஞ்ச காட்டப்போல
மனச நீயும் நனச்சுப்புட்ட...
ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாய்யா
பொன்னு மனச கொஞ்சம் புனைய வாய்யா..
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா..
டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா..
அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னாங்குழியில பதிக்கிறுச்சே
சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு
முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே…

போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே!

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்டே!
உன்னை பார்த்து பேசையிலே
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
மூக்கான கவுரப்போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடைகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு
அடி மஞ்ச கிழங்கே உன்னை நினைச்சு நினைச்சு தினம்
மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன்.
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ணை எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்
அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல!

(போறானே போறானே)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people