Song lyrics

Chinna Chinna Lyrics

சின்ன சின்ன சொல்லெடுத்து பாடல் வரிகள்

Last updated Jul 12, 2026

Music
Ilaiyaraaja
Year
1994
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyricist
Vairamuthu
Chinna Chinna

Lyrics

Chinna Chinna Lyrics

பெண் : சின்ன சின்ன சொல்லெடுத்து
சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு (இசை)


சின்ன சின்ன சொல்லெடுத்து
சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு
தனியாக மாமன் துணை தேடி வாட
தெரியாமல் நானும் பரிகாரம் தேட

சின்ன சின்ன சொல்லெடுத்து
சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

***

பெண் : கண்ணீர் கரைந்துருகும்
கன்னி மெழுகானேன்
நானே நீ பாரடி
மன்னன் மனம் கலங்க
மண்ணில் சருகானேன்
பூவே நீ கூறடி

ஆண் : நித்திரையை நானும் மூடி
நித்தம் ஒரு கானம் பாடி
உத்தமியை தேடி தேடி
கத்தும் ஒரு வானம் பாடி

பெண் : உன்னுதட்டில் பொய்யை வைத்து
முள்ளில் தைத்த பூவாய் ஆனேன்

ஆண் : என் மனதில் பாசம் வைத்து
கல்லில் செய்த தேராய் போனேன்

பெண் : அலை மேல் படகாய் ஆனேன்

ஆண் : சின்ன சின்ன சொல்லெடுத்து
சுந்தரிக்கு நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை
சுத்தமென்று நீ போய் கூறு

***

ஆண் : சொல்லால் விழைந்ததிந்த
சொந்தக்கதை தானே
பூவே நீ கேளடி
பெண்ணே வருத்தமில்லை
நெஞ்சில் என்ன பாரம்
நீயே போய் கூறடி

பெண் : கன்னிமையை மீறும் ஈரம்
கன்னி இவள் கோபம் கூறும்
வெண்ணிலவை மூடும் மேகம்
விட்டு விலகாதோ தூரம்

ஆண் : வண்ணக்கிளி போனபின்னே
தன்னந்தனியானேன் நானே

பெண் : எண்ணி எண்ணி ஆவதென்ன
கண்கள் உறங்காதோ மாமா

ஆண் : உயிர் போய் உடலானேன்
சின்ன சின்ன சொல்லெடுத்து
சுந்தரிக்கு நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை
சுத்தமென்று நீ போய் கூறு
குயிலோடு சேரு உன் பாட்டு கேளு
அவள் சோகம் தீர வழி நீயும் பாரு

பெண் : சின்ன சின்ன சொல்லெடுத்து
சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people