Song lyrics

Raagam Tharatha Veenai Lyrics

ராகம் தராத வீணை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
K. J. Yesudas, S. Janaki
Raagam Tharatha Veenai

Video

Raagam Tharatha Veenai

Lyrics

Raagam Tharatha Veenai Lyrics

ஆண் : ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேலை

பெண் : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

***

பெண் : நதியின் வேகம் பருவ மோகம்
கடலைச்சேர மாறிப்போகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்

ஆண் : இதழில் போடும் இதழின் காயம்
இதழிலாறும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்

பெண் : உன்னை வாழ்த்திப்
பாடும் பாடல் உதயராகமோ

ஆண் : நம்மை வாழ்த்தும்
நமது உலகம் உதயமாகுமோ

பெண் : புது கனவுக் காலம் தெரிந்ததே

ஆண் : நெஞ்சினில் இன்பமும்
கொஞ்சுது கெஞ்சுது

பெண் : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேலை

ஆண் : ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை

***

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (இசை)

ஆண் : இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில்
இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை

பெண் : மலையின் ஓரம் மலர்ந்த பூவைப்
பறிக்கும் வீரம் இருக்கும்போது
காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை

ஆண் : மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி

பெண் : பானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா

ஆண் : அட மனதில் சாரல் அடித்ததா

பெண் : கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ஆண் : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

பெண் : இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேலை

ஆண் : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

பெண் : புது ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people