Song lyrics

Maanuthu Mandhayilae Lyrics

மானுத்து மந்தையில பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
1993
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Vairamuthu
Maanuthu Mandhayilae

Lyrics

Maanuthu Mandhayilae Lyrics

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆ&பெ குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

அனைவர் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

***

ஆண் : நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

பெண்குழு : மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க

பெண்குழு : பிள்ளக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு

ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆ&பெ குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

***

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு

அனைவர் : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

பெண்குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க

ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இறுக்கச்சொல்லு
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே

ஆண்-1 : அய்யோ

ஆண் : பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண்-2 : ஹோய்

அனைவர் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே

ஆண்-3 : போடு

ஆண் : பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people