Lyrics
Vinodhane Vinodhane Lyrics
வினோதனே வினோதனே
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில்
கொட்டும் மழையை போலவே
மனதிலே காதலின் சாரல் அடிக்கிறதே
வினோதனே வினோதனே.......
ஒவிய பெண்ணே தூரிகையாலே
சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெரும் மலைகள் ஆயுதம் கூட
மல்லிகை பூக்கள் உடைத்திடுமே
உன்னை தினம் சுமப்பதால்
போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால்
மயக்கம் பிறக்கின்றதோ.. (வினோதனே...)
விறகென இருந்தேன் இதழ்களில் செதுக்கி
புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்
அழகே நீதான் அதிசய விளக்கு
அணைக்கும் போது எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே
கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே
சிங்கத்தை பிடிக்கின்றாய்....(வினோதனே...)
People
Related People
8 people