Song lyrics

Vaarai Nee Vaarai Lyrics

வாராய் நீ வாராய் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
G. Ramanathan
Year
1950
Singers
Thiruchi Loganathan & Jikki
Vaarai Nee Vaarai

Lyrics

Vaarai Nee Vaarai Lyrics

வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே....
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே.....

இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் 
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் அங்கே
வாராய்

அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே
அழிவிலா மோன நிலையைத் தூவுதே
முடிவிலா மோன நிலையை நீ 
முடிவிலா மோன நிலையை நீ
மலை முடியில் காணுவாய் 
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே 
வாராய் நீ வாராய்
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய் 

வாராய்..........
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people