All Bigg Boss Tamil 5 news
Bigg Boss Tamil 5

பரபரக்கும் பிக் பாஸ் 5 வேலைகள் போட்டியாளர்கள் இவர்கள் தானா?

ஸ்ரீரெட்டி, சோனா, ராதாரவி, பழகருப்பையா, லட்சுமி ராமகிருஷ்ணன், அஸ்வின் , சிவாங்கி மற்றும் புகழ் Bigg Boss Tamil5 Contestant List : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் காட்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்கு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது சீசனுக்கான வேலைகளையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ள நிலையில் தேர்தல் நெருங்கி வருவதால் கமல்ஹாசன் இந்த சீசனில் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒருபுறமிருக்க பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்கலாம் என்பது குறித்த லிஸ்ட் ஒன்றும் இணையத்தில் தீயாக பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்த லிஸ்ட்டில் ஸ்ரீரெட்டி, சோனா, ராதாரவி, பழகருப்பையா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் அஸ்வின் சிவாங்கி மற்றும் புகழ் ஆகியோரும் இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. இவர்களில் யார் யார் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Keep reading

More house updates

View all