Song lyrics

Kannanavan Sonnathellam Lyrics

கண்ணனவன் சொன்னதெல்லாம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. S. Viswanathan
Year
1989
Singers
K. S. Chitra
Lyricist
Muthubharathy
Kannanavan Sonnathellam

Lyrics

Kannanavan Sonnathellam Lyrics

கண்ணனவன் சொன்னதெல்லாம்
கவிதை என்றிருந்தேன்
கண்ணனவன் சொன்னதெல்லாம்
கவிதை என்றிருந்தேன்

அன்று நீ நிறைந்த விழியில்
இன்று நீர் நிறைந்ததென்ன
கண்ணீர் நிறைந்ததென்ன
கண்ணனவன் சொன்னதெல்லாம்
கவிதை என்றிருந்தேன்

உறவேது பகையேது அறியாத இளமானின்
விதியோடு விளையாடினாய்
நல்ல துணையாக உனைத் தேடி
வரும் பெண்ணின் இள நெஞ்சை
புரியாமல் விலை பேசினாய்

குணம் நாலும் குறையாமல்
மணவாளன் நலம் வேண்டி
பல கோயில் படியேறினேன்
உந்தன் மனம் மாறும் திருநாளை
இமையாத விழியோடு
தினம் தோறும் எதிர்பார்க்கிறேன்
உனை நானும் எதிர்பார்க்கிறேன்

கண்ணனவன் சொன்னதெல்லாம்
கவிதை என்றிருந்தேன்....ஆஆஆ...

உனக்காக ஒரு ரோஜா வளர்ந்தேனே
மன மேட்டில் உன் மார்பில் அதை சேர்க்கவே
அந்த மலர்கின்ற பொழுதெந்தன்
விரல் மீது காயங்கள் பூ ஏனோ முள்ளானதே

ஒரு வானம் ஒரு பூமி
ஒரு எண்ணம் ஒரு சொந்தம்
என்றென்றும் நான் வேண்டுவேன்
இனி உருவாகும் எதிர்காலம் நலமாகும் நமதாகும்
அந்நாளை எதிர்பார்க்கிறேன்
நன்னாளை எதிர்பார்க்கிறேன்..

கண்ணனவன் சொன்னதெல்லாம்
கவிதை என்றிருந்தேன்

அன்று நீ நிறைந்த விழியில்
இன்று நீர் நிறைந்ததென்ன
கண்ணீர் நிறைந்ததென்ன
கண்ணனவன் சொன்னதெல்லாம்
கவிதை என்றிருந்தேன்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people