Song lyrics

Ulundhu Vithakkaiyilae Lyrics

உளுந்து வெதக்கையிலே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
1999
Singers
Srinivas, Swarnalatha
Lyricist
Vairamuthu
Ulundhu Vithakkaiyilae

Video

Ulundhu Vithakkaiyilae

Lyrics

Ulundhu Vithakkaiyilae Lyrics

பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்.....

பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே!
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்....

பெண்: வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடஞ் சுத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவுமானதே!
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே!
இனி என்னாகுமோ? ஏதாகுமோ?
இந்தச் சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?ஓஓஓஹோ

பெண்: உளுந்து வெதக்கையிலே! சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்....
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்.....

ஆண்: அனிச்சு மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவுங் குயிலே
நீ எட்டியெட்டிப் போகையில விட்டுவிட்டுப் போகும் உயிரே.....(2)

ஆண்: ஒரு தடவ
இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச
நிறுத்து கண்மணியே

பெண்: ஒம்முதுக
தொளச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம்
இருக்கு என்னவனே

ஆண்: மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில்
புதையற வரையில்
உடன் வரக்
கூடுமோ

பெண்: உசிர் என்னோட இருக்கையில - நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த
மரணம் கூடக்
குழம்புமய்யா

ஆண்: குறுக்கு சிறுத்தவளே - என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம்
பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம்
மாத்து தாயே

பெண்: ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால
சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல
அந்த ஆத்தோட போவது போல் - நெஞ்சு
ஒன்னோடுதான்
பின்னோடுதே
அட காலம் மறந்து
காட்டு மரமும்
பூக்கிறதே

ஆண்: குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம்...
பெண்: பூசுவேன்யா
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம்
கொஞ்சம்...
பெண்: மாத்துவேன்யா

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people